லாரி மோதி பூசாரி பலி

லாரி மோதி பூசாரி பலியானார்.

Update: 2023-09-14 19:45 GMT

சிவகாசி, 

சாத்தூர் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது52). கோவில் பூசாரி. இந்த நிலையில் இருக்கன்குடி அருகில் உள்ள கோவிலில் பூஜையை முடித்து விட்டு சொந்த ஊரான ஆலம்பட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் இருக்கன்குடி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரி, பூசாரி அருள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பூசாரி அருள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் கங்கர்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் மீது அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்