செங்கவருக்கை மாம்பழம் விலை குறைந்தது

குமரி மாவட்டத்தில் செங்கவருக்கை மாம்பழம் விலை குறைந்து கிலோ ரூ.130-க்கு விற்பனையாகிறது. மேலும் நாவல் பழம் வரத்து அதிகரித்தது.

Update: 2023-06-03 20:10 GMT

திருவட்டார், 

குமரி மாவட்டத்தில் செங்கவருக்கை மாம்பழம் விலை குறைந்து கிலோ ரூ.130-க்கு விற்பனையாகிறது. மேலும் நாவல் பழம் வரத்து அதிகரித்தது.

ரூ.200-க்கு விற்பனை

குமரி மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று செங்கவருக்கை மாம்பழம். இந்த பழத்தை சிறுவர்கள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் இந்த வகை மாம்பழம் அதிக விலைக்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த மாத தொடக்கத்தில் கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்ட செங்கவருக்கை மாம்பழம் வரத்து அதிகரித்ததால் ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து ஆற்றூர் கல்லுப் பாலம் பகுதியை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது மாவட்டத்தில் பரவலாக செங்கவருக்கை மாங்காய் காய்த்துள்ளது. இதை பறித்து தோட்டத்தில் மற்றும் வீட்டில் பக்குவமாக பழுக்க வைத்து விற்கிறார்கள். சுவை மிகுந்த செங்கவருக்கை மாம்பழத்துக்கு கிராக்கி அதிகம். தற்போது கிேலா ரூ.130 க்கு விற்பனையாகிறது. இன்னும் சில நாட்களில் கிலோ ரூ100 க்கு கிடைக்க வாய்ப்புள்ளது' என்றார்.

நாவல் பழம்

அதுபோல் தற்போது ஆந்திர மாநில நாவல் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த பழம் கிலோ ரூ.400-க்கு விற்பனையாகிறது. மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்