குரும்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடத்தவிடாமல் தடுத்ததாக தலைவர் புகார்

குரும்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடத்தவிடாமல் தடுத்ததாக தலைவர் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-10-03 18:11 GMT

குரும்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடத்தவிடாமல் தடுத்ததாக தலைவர் புகார் அளித்துள்ளார்.

கந்திரி ஒன்றியம் குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமு கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் அளித்துள்ள மனுவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருணாச்சலம் என்பவரது மகன் ராஜா, ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்களை தகாத வார்த்தையில் அழைத்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த என்னை தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிராமத்தில் சாதி சண்டையை ஏற்படுத்த பார்க்கிறார். மேலும் கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்தார் என கூறியிருந்தார். அதேபோன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளித்தார்.

இதேபோன்று கந்திலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் ராஜா தனது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் குரும்பேரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடந்த முறை வரவு செலவு கணக்கு கொடுக்கவில்லை, இது குறித்தும், கிராம சபை நடத்தும் பேனர்களில் முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. படம் ஏன் போடவில்லை என்றும், ஊராட்சியில் மோட்டார் ரிப்பேர் எனவும், பிளீச்சிங் பவுடர் போடமலேயே பொய் கணக்கு எழுதியதையும் கேட்டதற்கு வேண்டுமென்றே பொய் தகவல்களை பரப்பி சாதி கலவரத்தை ஏற்படுத்த ஊராட்சி மன்ற தலைவர் ராமு முயல்கிறார் என கூறியிருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்