பலத்த மழையால் மின்கம்பம் சாய்ந்தது

நாட்டறம்பள்ளி அருகே பலத்த மழையால் மின்கம்பம் சாய்ந்தது.

Update: 2023-05-23 18:54 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் பகுதியில் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் ேதங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மழையின் போது கொத்தூர் பகுதியில் இருந்து மேல்கொம்பை பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது சாலையில் யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அப்பகுதியில் மின்நிறுத்தம் செய்தனர். அதன்பிறகு மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்