குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-09-04 18:35 GMT


திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு சேலம் கூட்ரோடு அருகே பெட்ரோல் பங்க் மற்றும் தனியார் வங்கி அருகே உள்ள சாலை கழிவுநீர் வெளியே வந்து குண்டும் குழியுமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலை கவனிக்கப்படாமல் தடுப்புகள் வைக்கப்பட்டு அப்படியே உள்ளது. மாவட்டத்தின் தலைநகரிலேயே சாலைகள் இந்தக் கதியில் உள்ளது. இந்தச் சாலை புதிதாக போடப்பட்ட சாலை ஆகும். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நெடுஞ்சாலைத் துறையினர் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்