போலீஸ் ஏட்டு,தொழிலாளிக்கு சரமாரி கத்திக்குத்து

திருவட்டார் அருகே டாஸ்மாக் கடை முன்பு போலீஸ் ஏட்டு, தொழிலாளியை சரமாரியாக கத்தியால் குத்திய மர வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-07-26 16:36 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே டாஸ்மாக் கடை முன்பு போலீஸ் ஏட்டு, தொழிலாளியை சரமாரியாக கத்தியால் குத்திய மர வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது கடையில் மோதல்

மார்த்தாண்டம் அருேக உள்ள பயணம் மணலிவிளையைச் சேர்ந்தவர் பிரஸ்லி பென்னி (வயது39), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் திருவட்டார் அருகே உள்ள ஆற்றூர் குட்டக்குழி ரோட்டில் டாஸ்மாக் கடையில் மது குடிக்க சென்றார்.

அங்கு மது குடித்து கொண்டிருந்த போது வேர்க்கிளம்பியை சேர்ந்த மர வியாபாரி விஜி என்ற ஸ்டேன்லி விஜயகுமாரும் (59) வேறு சிலரும் அங்கு வந்தனர். அப்போது மதுக்கடையின் முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஸ்டேன்லி விஜயகுமார் மற்றும் சிலர் பிரஸ்லி பென்னியை சரமாரியாக தாக்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு பயணம் மணலிவிளையை சேர்ந்த மதியரசு (37) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் தனது ஊரை சேர்ந்த பிரஸ்லி பென்னியை, சிலர் தாக்கி கொண்டிருப்பதை கண்டு அவர்களை தடுக்க முயன்றார். இதில் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

கத்திக்குத்து

இதில் ஆத்திரமடைந்த ஸ்டேன்லி விஜயகுமார் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதியரசுவின் இடுப்பிலும், மார்பிலும் சரமாரியாக குத்தினார். இதை தடுக்க முயன்ற பிரஸ்லி பென்னியின் தலை மற்றும் நெஞ்சிலும் கத்திக்குத்து விழுந் தது. படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.

அவர்களை அருகில் நின்றவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மோதலில் ஸ்டேன்லி விஜயகுமாரும் காயமடைந்தார். அவரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மதியரசு திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஸ்ேடன்லி விஜயகுமார் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதுபோல் ஸ்டேன்லி விஜயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதியரசு, பிரஸ்லி பென்னி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மதியரசு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். தற்போது மருத்துவ விடுப்பில் ஊருக்கு வந்த போது இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்