தீக்குளித்த போலீஸ்காரர் சாவு
தீக்குளித்த போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
அம்பை:
மணிமுத்தாறு சிறப்பு காவல் படை 12-ம் அணியில் சிறப்பு காவலராக மதுரை வேளாண் குளத்தைச் சேர்ந்த அழகர் மகன் தமிழ்செல்வன் (வயது 29) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் 2016-ம் ஆண்டு இளைஞர் காவல் படை மூலம் பணியில் சேர்ந்துள்ளார். போலீஸ்காரர் தமிழ்செல்வன் கடந்த 6-ந் தேதி திருமணமாகாத விரக்தியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பிறகு மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.