சாலையில் கொட்டிக் கிடந்த ஆயில் மண்ணைக் கொட்டி சரிசெய்த போலீசார்

சாலையில் கொட்டிக் கிடந்த ஆயில்மண்ணைக் கொட்டி போலீசார் சரிசெய்தனர்;

Update: 2022-07-06 18:49 GMT

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் ரவுண்டானா பகுதியில் சாலையின் நடுவே வழுக்கும் தன்மையுள்ள ஆயில் நேற்று ஒரு கன்டெய்னர் லாரியில் இருந்து கொட்டியது. இதனால் அந்த பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி வந்துள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சாலையில் கொட்டிக் கிடந்த ஆயில் மீது மண்ணைக் கொட்டி சரி செய்தனர். போலீசாரின் இந்த செயலை பார்த்து பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்