கொலை வழக்கில் கைதான 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை

கொலை வழக்கில் கைதான 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

Update: 2022-12-06 20:33 GMT

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி யாதவர் தெருவை சேர்ந்த மாயாண்டி (வயது 38) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கப்பாண்டி, பேச்சிக்குட்டி உள்பட 15 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சந்துரு (21) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான தங்கப்பாண்டி, பேச்சிக்குட்டி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நெல்லை கோர்ட்டில் தாழையத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மனு தாக்கல் செய்தார். மனு விசாரித்த நீதிபதி கைதான தங்கப்பாண்டி, பேச்சிக்குட்டி ஆகியோரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீவலப்பேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்