சாலைகளில் சுற்றி திரிந்தவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார்
சாலைகளில் சுற்றி திரிந்தவரை மீட்டு குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சாலைகளில் சுற்றி திரிந்தவரை மீட்டு குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைைய அடுத்த ஏலகிரி கிராமத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலைகளில் சுற்றித்திரிந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் உள்ள காப்பகத்தில் நேற்று முன் தினம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வாட்ஸ்-அப் குழுவில் பகிரப்பட்டது. அந்த தகவலை பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார், ஜோலார்பேட்டை போலீசாருடன் தொடர்பு கொண்டு இதுகுறித்த விவரங்களை கேட்டனர்.
போலீசாரால் மீட்கப்பட்டவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த வி.பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த கவுரவன் (வயது 80) என்றும், கடந்த 5-ந் தேதி காணாமல் போய்விட்டதாகவும் தெரிய வந்தது. இதுபற்றி அவரின் குடும்பத்தினர் வாட்ஸ் அப்பில் தகவல் ெதரிவித்திருந்தனர்.
போலீசார் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் காப்பகத்தில் இருந்து அவரை வரவழைத்து அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.