லாரிகளில் போலீசார் திடீர் சோதனை
ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டத்தில் மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா, நெல்லை உட்கோட்ட துணை சூப்பிரண்டு முத்துக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்கள் சரியாக வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து திடீர் சோதனை செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் லாரிகளில் சோதனை மேற்கொண்டனர்.