விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய போலீசார்

பிரச்சினைக்குரிய பகுதியை பார்வையிட சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய போலீசார் மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு

Update: 2023-01-22 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொரசப்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 34 பேர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தனபால் கட்சி நிர்வாகிகளுடன் அம்பேத்கர் நகர் பகுதியை பார்வையிடுவதற்காக வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தற்போது அம்பேத்கர் நகரை பார்வையிட செல்ல வேண்டாம் என்று கூறினர். அப்போது பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்பதற்காக மட்டுமே செல்கிறோம், எங்களை தடுக்க வேண்டாம் என்று கூறி அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு போலீசார் அனுமதி அளித்ததை தொடா்ந்து அவர்கள் அம்பேத்கர் நகர் பகுதிக்குள் சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் தனபால் கூறும்போது, வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார். அப்போது காட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்