தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் லாரிடிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் லாரிடிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் லாரிடிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
வழிப்பறி
தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் மடத்தூர் ரோட்டில் சென்ற போது, அங்கு மோட்டார் சைசக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் திடீரென செந்தூர்பாண்டியை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.6 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி கே.வி.கே.சாமி நகரை சேர்ந்த மாரிமுத்து மக்ன அய்யாத்துரை (22) உள்பட 3 பேர் சேர்ந்து திருடி இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் செந்தூர்பாண்டியை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
நெல்லை மாவட்டம் கோடகநல்லூரை சேர்ந்தவர் மணிராஜ் (வயது 27). லாரி டிரைவர். இவர் ஜோதிநகர் விலக்கில் வந்த போது, மர்ம நபர்கள் 2 பேர் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது செல்போனை பறித்து சென்றதாக எப்போதும் வென்றானை சேர்ந்த கற்குவேல் மகன் சத்தியமூர்த்தி (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.