விஷம் குடித்த தொழிலாளி சாவு

விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-24 18:58 GMT

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வீராசாமி (65). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கரூருக்கு வந்த வீராசாமி விஷம் குடித்த நிலையில் தாந்தோணிமலை பகுதியில் ஒரு கோவில் அருகே மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் வீராசாமியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்