விஷம் குடித்த பெண் சாவு
எரியோடு அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்தார்.
எரியோடு அருகே உள்ள பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் கீர்த்திகண்ணன் (வயது 34). அதே பகுதியை சோ்ந்த சற்குணம் மனைவி பானுப்பிரியா (28). கள்ளக்காதல் ஜோடியான இவர்கள் 2 பேரும், கடந்த 27-ந்தேதி விஷம் குடித்து நல்லமநாயக்கன்பட்டி அருகே வேடசந்தூர்-எரியோடு சாலையோரத்தில் மயங்கி கிடந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பானுப்பிரியா பரிதாபமாக இறந்தார். கீர்த்திகண்ணனுக்கு தொடர்ந்து சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.