அரசு பஸ்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

அரசு பஸ்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்த்தி உள்ளார்.

Update: 2022-07-11 14:50 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு பஸ்களை படிப்படியாகத் தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஊழல் மற்றும் அரசின் நிர்வாக திறமையின்மையை மறைக்க மக்கள் சேவை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகம், கடந்த 50 ஆண்டுகளாக ஏழை எளிய மக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகின்றது.

போதிய வருமானம் இல்லாத குக்கிராமங்களிலும், இலாப நட்டத்தைக் கணக்கில் கொள்ளாமல் மக்கள் சேவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இயங்கிவரும் அரசுப் பஸ்கள் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.

எனவே, அரசு பஸ்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழகத்தைச் சீரமைத்து, அதில் நடைபெறும் முறைகேடுகளைக் களைந்து லாபத்தில் இயங்கச் செய்ய உரிய நிர்வாகச் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்