2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடத்த திட்டம்

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இக்கோவிலில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு்ள்ளது என தருமபுரம் ஆதீனம் கூறினார்.

Update: 2023-03-10 18:37 GMT

திருவிடைமருதூர்:

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இக்கோவிலில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு்ள்ளது என தருமபுரம் ஆதீனம் கூறினார்.

கம்பகரேஸ்வரர் கோவில்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தர்ம சம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சரபேஸ்வரர் தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று காலை திருப்பணி தொடக்க நிகழ்ச்சியான பாலாலயம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கடங்கள் கோவில் பிரகாரம் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ரூ.4 கோடியில் திருப்பணி

கம்பகரேஸ்வரர் சன்னதியில் அமைக்கப்பட்டிருந்த விமானங்களின் படங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியதாவது:-

ரூ.4 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் காசாளர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்