குழாய் உடைந்துசாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்
போடியில் குழாய் உடைந்்து சாலையில் ஆறாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
போடி கோட்டை கருப்பசாமி கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதன் காரணமாக குடிநீர் வீணாக சாலையில் ஆறு போல் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். பல வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.