எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் தத்துவம் - கி.வீரமணி
எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் தத்துவம் என கி.வீரமணி கூறியுள்ளார்.
திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்கறிஞர் நிம்மதியின் தாயார் மல்லிகாராணி படத்திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி வீரமணி செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
நாட்டின் 75-வது சுதந்திரதினம் கொண்டாடும் வேளையில், இந்திய அரசியல் சட்டத்தில் கூறியுள்ளபடி, சமதர்மம், சமூக நீதி, மதசார்பின்மை தத்துவம், ஜனநாயக குடியரசு பேச்சுரிமை, கருத்துரை அனைவருக்கும் கிடைத்துள்ளதா என்ற கேள்வி எழும்போது, அனைவருக்கும் அனைத்தும், எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் தத்துவம் என்றும், இன்னாருக்கு இது தான் என்பது சனாதன தர்மம் என்றும், தமிழகத்தை அடுத்து தற்போது பீகார் மாநிலம் அதனை தற்போது பின்பற்றியதனால் மாற்றம் கண்டுள்ளது.
கர்நாடக மாநிலத்திலும் இத்தகைய மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூடிவருகிறது என்பது அங்குள்ள மக்களை சந்திக்கும் போது தெரியவருகிறது. வருங்காலங்களில், இந்தியா முழுமைக்கும் இத்தகைய பெரிய மாற்றங்கள் ஏற்படும், மாற்றம் ஒன்றே மாறாதது, அறிவுப்பூர்வமானது என்றும், கிழக்கு வெளுக்க தொடங்கி விட்டது என்று கி. வீரமணி தெரிவித்தார்.