பாட்டிக்கு திதி கொடுக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி பலி

அரூர் அருகே பாட்டிக்கு திதி கொடுக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி பலியானார்.

Update: 2022-11-23 19:30 GMT

அரூர்:-

அரூர் அருகே பாட்டிக்கு திதி கொடுக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி பலியானார்.

தனியார் நிறுவன ஊழியர்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42), இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இவர் தன்னுடைய பாட்டிக்கு திதி கொடுப்பதற்காக அனுமன்தீர்த்தம் பகுதிக்கு வந்தார். அந்த பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

தண்ணீரில் மூழ்கி பலி

இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். ஆனால் அதற்குள் நீரில் மூழ்கி பலியானார். அவருடைய உடல் ஆற்றின் கரை ஓரத்தில் ஒதுங்கியது.

இது பற்றி தகவல் அறிந்த அரூர் போலீசார் அங்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்