தனியார் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டவர் கைது

தனியார் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டவர் கைது

Update: 2022-12-19 20:05 GMT

கருங்கல்:

கருங்கல் கருமாவிளை பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி (வயது45) என்பவர் அடிக்கடி சென்று தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்ற ஸ்டான்லி அங்கிருந்த செவிலியர்களிடம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து கருங்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மருத்துவமனை டாக்டர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டான்லியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்