புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மச்சுவாடி பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஜெயராம் (வயது 41) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.