குளித்தலை போலீசார் பெரிய பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த குளித்தலை சண்முகா நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.