கஞ்சா வைத்திருந்தவர் கைது
சங்கரன்கோவிலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் டவுன் போலீசார் தெற்கு ரதவீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் சங்கரன்கோவில் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜய் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.