திண்டிவனம்
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீநாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மேற்பார்வையில் பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ஆத்தூர் ஏரிக்கரை அருகே தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த மர்மநபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திண்டிவனம் தாலுகா, ஓமந்தூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் முரளி என்கிற தவக்களை முரளி(வயது 40) என்பதும் அவர் கையில் வைத்திருந்த பாலிதீன் பையில் விற்பனைக்காக 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தொியவந்தது. இதையடுத்து முரளியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.