சிவகாசி,
போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் மற்றும் போலீசார் ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூரார்பட்டி கிராமத்தில் நின்று கொண்டிருந்த முதியவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் வெம்பக்கோட்டையை சேர்ந்த முத்துப்பாண்டி(வயது 58) என்றும்இ அவர் 150 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அரிவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.