சிலையை சேதப்படுத்தியவர் கைது

நெல்லையில் சாமி சிலையை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-10-02 20:59 GMT

நெல்லை சந்திப்பு மதுரை ரோடு இசக்கியம்மன் கோவிலில் கடந்த மாதம் 17-ந்தேதி‌ மர்ம நபர்களால் சாமி சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து சிந்துபூந்துறையை சேர்ந்த இசக்கியப்பன் (வயது 44) என்பவர் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இந்த நிலையில் தச்சநல்லூர் அழகநேரியை சேர்ந்த பால் இசக்கி (40) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்