இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-15 20:00 GMT


அன்னூர்

அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்து கொண்டிருந்தார்.


அதை, வாலிபர் ஒருவர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து உள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டார். அதை கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது அந்த பகுதியை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் என்பதும், அவர் போலீசாருக்கு பயந்து தனது செல்போனில் இருந்த வீடியோக்களை அழித்ததும் தெரியவந்தது.

உடனே அவரை போலீசார் கைது செய்தனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் செய்திகள்