விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மானூர் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-12 20:05 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). விவசாயி. இவரது வீட்டின் அருகே வசித்து வரும் இசக்கிமுத்து என்பவரது வீட்டில் கதவை உடைத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தங்க நகை மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து இசக்கிமுத்து மானூர் போலீசில் புகார் செய்ததோடு, சந்தேகத்தின் பேரில் 2 குறிப்பிட்டும் கூறியுள்ளார். அதன்படி வழக்கு விசாரணையில் உள்ளது.

இ்ந்தநிலையில் மாரியப்பன் தான் தனது பெயரை குறிப்பிட்டுள்ளதாக கூறி, மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்த மகேஷ் (45) என்பவர் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வரவே, கையில் இருந்த அரிவாளைக்காட்டி மாரியப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்துச்சென்றுள்ளார். இதுகுறித்து மானூர் போலீசில் மாரியப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்