விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.;
போடி அருகே உள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 36). இவரது மனைவி யோகா. இவர்கள் இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் யோகாவின் அண்ணன் விவசாயியான விவேகானந்தன் (38) என்பவர், அதே கிராமத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது சுகுமார் அங்கு வந்தார். அவர் விவேகானந்தனிடம் தனது தங்கையை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விவேகானந்தன், போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுகுமாரை கைது செய்தனர்.