தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பேட்டையில் தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-03 18:06 GMT

பேட்டை:

சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் இசக்கி மகன் பரமசிவன் (வயது 41) கூலித்தொழிலாளி. சுத்தமல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் மகன் நவாப்கான் (36). இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நவாப்கான், பரமசிவனை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரமசிவன் கொடுத்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நவாப்கானை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்