பொதுமக்களை மிரட்டியவர் கைது
பொதுமக்களை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.;
கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள அண்ணாநகர் மேம்பாலத்தின் கீழ் தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் (வயது 48) என்பவர் கையில் தடி வைத்துக்கொண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தினார். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்திலை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். இருப்பினும் செந்தில் அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.