பாத்திரங்களை திருடியவர் கைது

பாத்திரங்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-21 19:10 GMT

கரூர் அருகே உள்ள செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் குரு தினேஷ். இவர் கரூர் ஜவகர் பஜாரில் சில்வர் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமகிருஷ்ண புரத்தை சேர்ந்த கார்த்திக் (44) என்பவர் பாத்திரம் வாங்குவதுபோல் கடைக்கு வந்து அங்கிருந்த சில்வர் பாத்திரங்களை திருடி உள்ளார். இதுகுறித்து குரு தினேஷ் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த சில்வர் பாத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்