செல்போன் டவர் பேட்டரியை திருடியவர் கைது

ஜெயங்கொண்டத்தில் செல்போன் டவர் பேட்டரியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-08 18:12 GMT

ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் டிப்ளமோ படித்துவிட்டு தனியார் செல்போன் டவர் கம்பெனியில் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் பகுதியில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் உள்ள செல்போன் டவருக்கு ஆனந்தன் சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி ஒருவர் செல்போன் டவர் பேட்டரியை கழட்டி தூக்கி சென்றார். அப்போது ஆனந்தனை கண்டதும் பேட்டரியை கீழே போட்டுவிட்டு அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் ஆனந்தன் அப்பகுதி மக்கள் உதவியுடன் அந்த ஆசாமியை மடக்கி பிடித்து ஜெயங்கொண்டம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் கூவத்தூரை சேர்ந்த மார்ட்டின் (30) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்