5 வீடுகளில் திருடியவர் கைது

சரவணம்பட்டி யில் உள்ள 5 வீடுகளில் நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2023-03-11 18:45 GMT


கணபதி

கோவை கணபதி மாநகர், காந்திமாநகர் உள்ளிட்ட இடங்களில் 5 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டன.

இது குறித்த புகார்களின் பேரில் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி செருப்பனையூரை சேர்ந்த இளங்கோ என்பவரது மகன் அன்பு (வயது 33) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில், சரவணம்பட்டி யில் உள்ள 5 வீடுகளில் நகைகளை திருடி அன்பு கைவரிசை காட்டியது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்