காப்பர் வயர்களை திருடியவர் கைது

வேடசந்தூர் அருகே சோலார் மின்உற்பத்தி நிலையத்தில் காப்பர் வயர்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-01 19:45 GMT

வேடசந்தூர் அருகே அய்யம்பாளையம் பகுதியில் தனியார் நூற்பாலைக்கு சொந்தமான சோலார் மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மின்உற்பத்தி நிலையத்தில் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர்களை கருப்பதேவனூரை சேர்ந்த ரஞ்சித் (வயது 22) என்பவர் சாக்கு பையில் கட்டி திருடி சென்றார். அவரை நூற்பாலை அதிகாரி செந்தில்குமார் என்பவர் கையும்களவுமாக பிடித்து வேடசந்தூர் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்