கலவரத்தை தூண்டும் வகையில் பேசியவர் கைது

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியவர் கைது;

Update: 2023-02-15 18:45 GMT

ஆர்.எஸ்.புரம்

கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜ.க. உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் குண்டு வெடிப்பில் பலியானர்வர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் இசக்கி என்ற இசக்கி ராஜா (வயது 37) என்பவர் கலந்துகொண்டார். அவர் இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இசக்கிராஜா மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் இரு மதத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்