கள் விற்றவர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் தங்கள் எல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் குடத்துடன் சென்ற முதியவரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட கள்ளை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த முதியவரான குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த கோட்டைச்சாமி(வயது 72) என்பவரை கைது செய்து கள்ளை கீழே ெகாட்டி அழித்தனர்.