கள் விற்றவர் கைது

சின்னசேலம் அருகே கள் விற்றவர் கைது

Update: 2023-02-04 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அருகே தோட்டப்பாடி கிராம காட்டுகொட்டாய் பகுதியில் தென்னங் கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடத்தது. இதையடுத்து கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தோட்டப்பாடி காட்டுக்கொட்டாய் பகுதி விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் மண் கலயங்கள் கட்டப்பட்டு இருந்ததை பார்த்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது சின்னசேலம் குமரன் நகர் பகுதியை சேர்ந்த பிச்சபிள்ளை மகன் பெரியசாமி(வயது 50) என்பவர் தென்னை மரங்களை குத்தகைக்கு எடுத்து கள் இறக்கி விற்பனை செய்து வந்தது தொியவந்தது. இதையடுத்து பெரியசாமியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் தென்னங்கள்ளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்