அத்திப்பாளையம் பகுதியில் தென்னங்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தென்னங்கள் விற்று ெகாண்டிருந்த அத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த மணி (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 4 லிட்டர் தென்னங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.