கூரை வீட்டுக்கு தீ வைத்தவர் கைது

முன்விரோதம் காரணமாக கூரை வீட்டுக்கு தீ வைத்தவர் கைது

Update: 2023-06-03 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரின் கூரை வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து வினோத் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த ஏப்ரல் மாதம் ஜானகிபுரம் பகுதியில் 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் வினோத் ஒரு சாட்சியாக செயல்பட்டதால் அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த வீரபத்திரன் (வயது 39) என்பவர், வினோத்தின் கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது. இதையடுத்து வீரபத்திரனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்