பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பியவர் கைது
அணைக்கட்டு அருகே பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.
அணைக்கட்டு
அணைக்கட்டு அடுத்து ஊணைவாணியம்பாடி அருகே உள்ள ஏரி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 49). இவர் அதேப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் செல்போனில் அடிக்கடி தொடர்புகொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும் ஆபாச படங்களையும் அனுப்பி தொல்லை கொடுத்து வந்தள்ளார்.
இதுகுறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அணைக்கட்டு போலீசார் மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.