போலீசை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் கைது

நெல்லை சந்திப்பில் போலீசை பணிசெய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-29 19:55 GMT

நெல்லை சந்திப்பு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டவுன் வேம்படி தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் (வயது 49) என்பவர் மதுபாட்டில்கள் விற்றுகொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். அப்போது அவர் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்