10-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்தவர் கைது

சாத்தனூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-08 17:08 GMT

செங்கம்

சாத்தனூர் அருகே அய்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 57).

இவர் அதே பகுதியில் வசித்து வரும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சம்பவத்தன்று 500 ரூபாய் நோட்டை காட்டி ஆசை வார்த்தைகளை கூறி சில்மிஷம் செய்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மாணவி தரப்பில் செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்