சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2022-08-23 20:33 GMT

தஞ்சை அருகே உள்ள காட்டூர் மேலத்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர் தஞ்சையை அடுத்துள்ள ஒரு கிராம பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை தஞ்சை அருகே மில் வேலைக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. அங்கு குமார், அந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால், அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். பின்னர் அந்த சிறுமியை ஆறுமுகம் என்பவர் திருமணம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட அவர் சிறுமியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். பெற்றோர் வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தரிவித்துள்ளனர்.இதுகுறித்த புகாரின்பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த ஆறுமுகத்தை(40) கைது செய்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த குமாரை தஞ்சை அருகே நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.







Tags:    

மேலும் செய்திகள்