கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த தர்மா மகன் லிங்கம் (வயது 47). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெற்றிவேல் மகன் செல்வகுமார் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் லிங்கம் வேம்பார் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு செல்வகுமார் வந்தார். அப்போது, அவர், லிங்கத்திடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லிங்கம் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.