500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது

500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-10 18:48 GMT

புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் புதுக்கோட்டை திருக்கட்டளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் மாங்கொட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) என்பவரது வீட்டில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்