லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடி அருகே லாட்டரி சீட்டுகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-06-24 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் நேற்று முள்ளக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கக்கன்ஜி நகர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முள்ளக்காடு கோவிலம்மாள் நகரை சேர்ந்த கோவில்ராஜ் (வயது 59) என்பதும், அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 37 வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்