மாடியில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தாா்.

Update: 2023-06-06 18:45 GMT


உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்து ஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 57). தொழிலாளி. இவர் நேற்று மாலை, தனது வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும்வழியிலேயே சுந்தரமூர்த்தி உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்