கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர் கைது

கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர் கைது செய்யப்பட்டார்;

Update: 2022-10-30 21:04 GMT

நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியில் கடந்த 2021- ம் வருடம் நடந்த கொலை வழக்கில் புளியங்குளத்தை சேர்ந்த ஊசிபாண்டியன் என்ற ஊசிகாட்டான் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

பின்னர் இவர் நெல்லை கூடுதல் கோர்ட்டில் விசாரணைக்கு கடந்த 7 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவருக்கு கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊசிபாண்டியனை தாழையூத்து போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இவர் மீது களக்காடு, நெல்லை சந்திப்பு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு ஆகிய போலீஸ் நிலையங்களில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்